வெங்காய வெடியை உட்கொண்ட யானைக்குட்டி உயிரிழப்பு

வாய்ப் பகுதியில் காயங்களுடன் காணப்பட்ட யானைக்குட்டி ஒன்று, வவுனியா, ஆச்சிபுரம் பகுதி பப்பாசித் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை இறந்துள்ளது.

குறித்த தோட்டத்துக்குள் நுழைந்த 6 வயது மதிக்கத்தக்க யானைக்குட்டி  உணவருந்த முடியாத நிலையில், தோட்டத்தில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, யானைக்குட்டியைப் பார்வையிடச் சென்ற மக்களைத் துரத்தி அச்சமடைய வைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதேச வாசிகளால் வவுனியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த திணைக்களத்தினரால்  வட மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்குச் வைத்தியர் தலைமையிலான குழுவினர், வெங்காய வெடியை உட்கொண்டதனாலையே   யானைக்குட்டி  உணவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்தோடு, யானைக்குட்டிக்கான சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி யானைக்குட்டி இன்று இறந்துள்ளது.