கிளிநொச்சி நகரில் வீதி விபத்தில் முதியவர் பலி
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியை கடக்க முற்பட்ட போது, கிளிநொச்சி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் குமரேசன் (வயது – 74) எனும் முதியவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்