வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

பதுளை – கிராதுருகொட்ட பட்டாலய பகுதியில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

கிராதுருகொட்ட விரணகம பகுதியை சேர்ந்த 35 வயதுடைய மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

மேலும் கிராதுருகொட்ட விரணகம பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மற்றைய நபர் படுகாயம் அடைந்து மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பட்டாலய திபுல்பலஸ்ஸ வீதியில் இன்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, ​​மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி 7 ஆம் கட்டை பகுதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், , மேலதிக விசாரணைகளை கிராதுருகொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி . சுதேஷ் சதுரங்க தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க