வீதியில் படுத்திருந்த மாட்டினால் விபத்து

-யாழ் நிருபர்-

யாழ் . ஓமந்தை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கன்டைனர் வாகனம், ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் கன்டைனர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.

விபத்தினால் வாகனத்தில் பயணித்த இரண்டு பேருக்குகாயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் படுத்திருந்த மாட்டினால் விபத்து