வீதியில் நடந்து சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!
வவுனியா – மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியில் சென்ற ஒருவர் மீது மோதுண்டுள்ளது.
இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாரவூர்தியின் சாரதி, சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர் மிஹிந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்