
வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து
-பதுளை நிருபர்-
பதுளை அலுகொல்ல கந்தேகெதர வீதியில் பயணித்த பேருந்து ஒன்று இன்று திங்கட்கிழமை காலை கொஹொவில பிரதேசத்தில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு கொஹவில கோவிலுக்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பேருந்து விபத்துக்குள்ளான போது பேருந்தினுள் 12 பேர் பயணம் செய்ததாகவும் அவர்களில் எவரும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்