வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மலை வேம்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று இன்றையதினம் வேரோடு சரிந்தது.
இதனால் குறித்த பாதையுடாக பயணத்தை செய்யும் மக்கள் மிகவும் அசௌகரிகங்களை எதிர்நோக்கினர்.
பின்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அந்த மரத்தினை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீராகியது.