வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்

🟢மூலிகை செடிகள் தான் தற்போது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நம்முடைய உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இது பாதுகாப்பான முறையாக இருப்பதோடு செலவு குறைந்த முறையும் ஆகும்.

🟢இந்த மூலிகை செடிகளை சில வீட்டு வைத்தியங்களுக்கு பயன்படுத்தலாம். அந்தவகையில் எந்த மாதிரியான மூலிகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம் மற்றும் அதன் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

துளசி

🍀துளசி ஒரு இந்து மதத்தின் புனித செடியாக கருதப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது.

🍀இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன. ராம துளசி, வன துளசி, கிருஷ்ணா துளசி, கற்பூர துளசி. இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளிபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்பூர துளிசி எண்ணெய் காது பிரச்சினைகள் மற்றும் காது சொட்டு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இந்த ஆயில் சோப்பு, ஷாம்பு போன்று உடம்பை சுத்தப்படுத்தும் பொருளாகவும் அமைகிறது. துளசியில் கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருள்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், ஆன்டி பயோடிக் பொருட்கள் போன்றவை காய்ச்சல், சலதோஷம் மற்றும் மூச்சு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

🍀ராம துளசி இலைகள் நீண்ட நாள்பட்ட மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த துளிசியின் சாறு காய்ச்சல், சலதோஷம், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் மலேரியாவை சரி செய்யவும் துளசி பயன்படுகிறது.

கற்றாழை

🍀கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இது கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடியாகும். இது நல்ல நீர்ச்சத்தை கொடுக்கக்கூடிய மூலிகையாக உள்ளது.

🍀இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடம்பு வயதாகுவதை தடுக்கிறது. நீங்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

🍀அடிபட்ட மற்றும் வெட்டப்பட்ட காயங்கள் மற்றும் தீ காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அலற்சியை எதிர்க்கிறது. மேலும் உங்கள் சருமம் மற்றும் தலை முடிகளை பாதுகாக்கிறது.

வேப்பிலை

🍀இது மிகவும் பழங்கால மருத்துவ குணம் வாய்ந்த தாவரமாகும். இது ஒரு மரமாக வளரக் கூடியது. இருப்பினும் வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கியமான மரமாகும்.

🍀இதில் ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. இது உள் மற்றும் வெளி பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. இதன் இலை சாறு மற்றும் எண்ணெய் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மூலிகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

வெந்தயம்

🍀வெந்தயத்தின் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது.

🍀இது கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

வல்லாரை

🍀வீட்டிலேயே வளர்க்க கூடிய செடி வல்லாரை ஆகும். இது நமது மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் மிகச் சிறந்த மூலிகை பொருளாகும். இந்த சின்ன மூலிகை செடி அல்சர், சரும பாதிப்பு, இரத்த குழாய் சுருக்கம் போன்றவற்றை சரியாக்குகிறது.

🍀நீங்கள் எப்பொழுதும் இளமையாக இருக்க நினைத்தால் இதை தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே போதும். இதன் இலைகளை கசக்கி பிழிந்த சாறு வெளியில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டல சீரான இயக்கத்திற்கு பயன்படுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.

புதினா

🍀இந்த மூலிகை செடி உலகளவில் எல்லாராலும் வளர்க்கப்படும் முக்கிய செடியாகும். இதில் இயற்கையாகவே மக்னீசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி போன்றவைகள் உள்ளன. இதன் இலைகளிருந்து தயாரிக்கப்படும் சாறு தசைகளுக்கு ரிலாக்ஸ் கொடுக்க பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

🍀மேலும் வாய்வு, வயிற்று மந்தம், காய்ச்சல், எரிச்சலுடன் மலம் கழித்தல், பெருங்குடல் பிரச்சினை போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. நமது உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினைத் தடுக்கிறது.

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்