
வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்றவர் கைது!
-அம்பாறை நிருபர்-
வீட்டில் மறைத்து வைத்து, கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர்புரம் பகுதியில், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அதிகளவான கசிப்பு கலன்களுடன், நேற்று திங்கட்கிழமை, 45 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் வசம் இருந்து 15,000 மில்லி லீற்றர் கசிப்பினை, சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி இருந்தனர்.
கைதான சந்தேக நபர், நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, சம்மாந்துறை ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை, சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரனதுங்க தலைமையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்