வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை
இந்தியாவில் திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்தவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.
இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியைச் சேர்ந்த நாகநாதன் புருனே நாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது 40 வயதான மனைவி பிரபாவதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கதவை உடைத்து வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள், அவரை கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்த நகையையும், பீரோவை உடைத்து, அதிலிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்