வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் பலி
பண்டாரவளை பகுதியிலுள்ள வீடொன்றின் சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் 61 வயதான பெண் ஒருவரே உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.