வீடொன்றிலிருந்து உள்ளூர் துப்பாக்கி மீட்பு : ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பசறை பரமாங்கடை பகுதியில் வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பதுளை பிராந்திய குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றியதோடு 70 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நாளை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.