வீடொன்றின் மீது விழுந்த விமானம் : ஒருவர் பலி!
லிதுவேனியா நாட்டில் சரக்கு விமானமொன்று வீடொன்றின் மீது விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
லிதுவேனியாவில் வில்னியுஸ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு விமானம் விழுந்துள்ளது.
லெய்ப்ஜிக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட, ஸ்பெயின் சரக்கு விமான நிறுவனமொன்றுக்கு சொந்தமான போயிங் 737 எனும் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த வேளை ஓடுபாதையிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீட்டில் மீது விழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் விமானத்தில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது