வீடு கட்டும் போது ஏன் வெள்ளி நாகம் வைக்கிறார்கள்?
பொதுவாக புது வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது மதங்களின் படி வழிபாடுகள் செய்வது வழக்கம்.
அந்த வரிசையில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் சிலர் வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது வெள்ளி நாகத்தை வைத்து வழிபட்ட பின்னரே கட்டுமானப்பணியை ஆரம்பிப்பார்கள்.
ஏனெனின் இந்து மதத்தின்படி, ஒருவர் வாஸ்துப்படி வீடு கட்டவில்லையென்றால் அந்த வீட்டில் நிம்மதி இருக்காது. மாறாக வீட்டின் கதவு, ஜன்னல், அறை என்பவைகளை வாஸ்துப்படி கட்டப்பட வேண்டும்.
அதே சமயம், வீடு கட்டுவதற்கு முன் அஸ்திவாரத்தின் போது பூமியில் வெள்ளி பாம்புகள் வைக்கப்படுகின்றன. இந்த சடங்கை இந்து மக்கள் பாரம்பரியமாக செய்து வருகிறார்கள்,
அப்படியாயின் வீடு கட்டும் போது வெள்ளி நாகம் வைப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வாஸ்து சாஸ்திரப்படி, வீடு கட்டும் பொழுது வெள்ளி பாம்புகள் கலசங்களை வைத்தால் வீட்டின் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என நம்பப்படுகின்றது.
2. ஸ்ரீமத் பகவத் மகாபுரானின் ஐந்தாவது காண்டத்தில் பூமிக்கு அடியில் பாதாள உலகம் இருக்கிறது. இதனை அதிபதி ஷேஷ்நாக் என்பவர் ஆட்சி செய்கிறார். இதனை அடிப்படையாக வைத்து வெள்ள பாம்புகள் வீடு கட்டும் பொழுது பூமிக்கு அடியில் வைக்கிறார்கள்.
3. வீட்டை எதிர்மறையான சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் இந்த சடங்கு செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்