
வீடுகள் கோயில்களில் தைப்பொங்கல்
-மூதூர் நிருபர்-
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மூதூர் பிரதேசத்திலுள்ள உள்ள இந்துக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக வீடுகளில் கொண்டாடினர்.
இதேவேளை மூதூர் – மல்லிகைத்தீவு பிரதேசத்தில் உள்ள இந்து மக்கள் தமது வீடுகளில் பொங்கல் பொங்கி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக உழவர் திருநாளை கொண்டாடியதையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
மேலும் மூதூர் – மல்லிகைத்தீவு மங்களேஸ்வர் ஆலயத்திலும் தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்