வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளதால் அவர்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வெள்ளநீர் வடிந்தோடிக்கொண்டு இருக்கிறது. இருப்பினும் வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.