வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானம்
வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா, பீன்ஸ் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நஷ்டஈடாக ஹெக்டேயருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தமை சுட்டிக்காட்டதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்