விலை அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்படாது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை பல தடவைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அந்த விலைக்கு ஏற்ப கொடுப்பனவு அதிகரிக்கப்படாது எனவும், முன்னைய எரிபொருள் விலையிலேயே பெப்ரவரி மாத கொடுப்பனவு வழங்கப்படும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.