
வியர்வை எந்த நோயின் அறிகுறிகள்
🟤நிறைய பேருக்கு எந்த வேலையும் செய்யாமல் நிறைய வியர்வை வெளிப்படும். ஆனால், அவர்கள் இது உடலுக்கு நல்லது, உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளிவருகிறது என்று எண்ணுவார்கள். ஆனால், இது சில உடல்நலக் கோளாறுகளின் அறிகுறிகள்.
🟤மாரடைப்பு, குறைந்த இரத்த சர்க்கரை அளவு போன்ற பல உடல்நலக் கோளாறுகள் வரப்போகிறது என்பதை உணர்த்துவது வியர்வையாகும். இனி, எந்த வேலையும் செய்யாமல் அதிகமாக வியர்ப்பது எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறி என்று இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
🔶85% மேலான பெண்களுக்கு, அவர்களது மாதவிடாய் சுழற்சி காலம் நிற்கும் போது அதிகமான வியர்வை வெளிப்படும். 40 – 45 வயதிலான பெண்களுக்கு அதிகமான வியர்வை வெளிபடுகிறது எனில் அதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.
🔶உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்து வருகிறது என்பது அதிகப்படியான வியர்வை வெளிவருவதை வைத்துக் கண்டறியலாம். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான அறிகுறி இது.
🔶அதிகப்படியான வெயிலின் தாக்கம் இருக்கும் போது வெப்ப பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. வெயிலின் காரணமாக அதிகமானா வியர்வை வெளிப்படுவது இயல்பு தான். ஆயினும், அளவுக்கு மீறி வியர்வை வெளிப்படுகிறது எனில் உங்களுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதற்கான அறிகுறி.
🔶வேலை பலுவின் காரணமாகவோ அல்லது பதட்டத்தின் காரணமாகவோ உங்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டால் அதிகமான வியர்வை வெளிப்படும். இது போன்ற அதிகப்படியான மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தைக் கெடுக்கும்.
🔶ட்ரைமெத்தைலேமினுரியா என்பது ஓர் மரபணு கோளாறு. இதன் காரணமாக அதிகப்படியான வியர்வை வெளிவருதல், சிறுநீர் கழிந்தால் நாற்றம் ஏற்படுவதும், வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படும். இது போன்ற கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது தான் சரியான முறை.
🔶நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் ஏற்பட்டிருந்தால் கூட இதுப் போன்று அதிகமான வியர்வை வெளிபடுதல் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் மட்டுமின்றி, பார்கின்சன் நோய், ஹைபர்தைராய்டு போன்ற நோய்களின் தாக்கம் இருந்தால் கூட இதுப் போன்ற அதிகமாய் வியர்வை சுரக்கும்.
வியர்வை எந்த நோயின் அறிகுறிகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்