விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

2 கிலோவுக்கும் அதிகம் என சந்தேகிக்கப்படும் கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்