விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!
பிரேசிலின் மிகப்பெரிய விமான நிலையமான சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர், திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.