விமானத்தில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் விமானத்தில் மயங்கி விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்திய வம்சாவளி சேர்ந்த மன்ப்ரீத் கவுர் ( வயது 24 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற ஆசையுடன் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்கச் சென்றுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் ஏறியுள்ளதுடன் விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

சீட் பெல்ட்டை இறுக்கமாக கட்டியபோது, ​​ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஊடகம் கூறியுள்ளது.

மேலும் குறித்த பெண் காசநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோய் என்றும், அந்த நோயினால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்