Sri Lanka Tamil News Site

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

- Advertisement -

போலி ஆவணங்களை கொண்டு கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றச்சாட்டில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

- Advertisement -

இது தொடர்பில் விசாரணை செய்த, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான்  புத்திக ஸ்ரீ ராகலவினால் 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபராத தொகையை செலுத்தத் தவறினால்  இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக  ஆறு மாதகால சிறைத் தண்டனையை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!