விபத்து: சாலையைக் கடக்க முயன்ற நபர் உயிரிழப்பு

இந்தியாவில் கோபி செட்டிபாளையம் அருகே நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது மகனை கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு செல்ல கோபி – ஈரோடு சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்