விபத்தில் வைத்தியர் ஒருவர் உட்பட இருவர் படுகாயம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியர் பயணித்த கார் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளானர்.

இதன்போது இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்