விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் தனியார் பேருந்தும் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்து ஹலாவத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த சிறுமி பாடசாலை முடிவடைந்து தாயுடன் வீதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த வயோதிபப் பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தினை தொடர்ந்து பிரதேசவாசிகள் தனியார் பேருந்தினை தாக்கியுள்ள நிலையில் சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்