விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ம் திகதி முறிகண்டிக்கும்,  இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ-9 வீதியில் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியுடன் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செனவரட்ன எனவும் அவரது திருமணம் நடந்து ஒரு வருடகாலம் ஆகியுள்ளது எனவும் அறிய முடிகிறது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.