விந்தணு தானம் மூலம் பிறந்த தனது 100 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொத்தை பிரித்து கொடுக்கும் பிரபலம்

டெலிகிராம் செயலியின் ஸ்தாபகர் பவெல் துரோவ் (Pavel Durov) அவருடைய 100 க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு சொத்துக்களை பகிர்ந்து கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுமார் 13.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தன்னுடைய சொத்துக்களை இவ்வாறு பகிரவுள்ளதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய மூன்று மனைவிகளுக்கும் பிறந்த 6 குழந்தைகள் உட்பட விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த சொத்தை பங்கிடவுள்ளதாக வெல் துரோவ் (Pavel Durov) கூறியுள்ளார்.