தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அலுவலகத்தில் இரத்த தான நிகழ்வு
மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் 49ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்