
“விசுவாசுவ” சித்திரை புதுவருடப் பிறப்பு
“விசுவாசுவ” சித்திரை புதுவருடப் பிறப்பு
தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு ஒன்றாகும். இது பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இது சூரியப் பொங்கல் காலத்துக்குப் பின் வரும், சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் நாளாகும். இதை “சித்திரை திருநாள்” என்றும் அழைக்கிறார்கள். தமிழ் நாட்களில் இது சித்திரை மாதத்தின் முதல் நாளாகும், அதனால் இந்த நாள் தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.
“விசுவாசுவ” சித்திரை புதுவருடப் பிறப்பு
திருக்கணித பஞ்சாங்கம்
- 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 3.21 மணிக்கு விசுவாவசு வருடம் பிறக்கின்றது.
வாக்கிய பஞ்சாங்கம்
- 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 2.29 மணிக்கு விசுவாவசு வருடம் பிறக்கின்றது.
விஷு புண்ணியகாலம்
- 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை. ( தலைக்கு – ஆலிலை , காலுக்கு -இலவமிலை )
ஆடை நிறம்
- சிவப்பு, வௌ்ளை , நீலம்
கை விஷேடம் பரிமாறும் நேரம்
- திருக்கணித பஞ்சாங்கம்
14ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06.05 முதல் 07.10 மணி வரை
காலை 09.05 முதல் 09.55 வரை
- வாக்கிய பஞ்சாங்கம்
14 திங்கட்கிழமை பகல் 09 .09 முதல் 09.56 வரை
பகல் 9.59 இல் இருந்து 10.31 வரை
பிற்பகல் 4.06 இல் இருந்து 5 மணி வரை
ஆதாய விடயம்
- மேஷம் – 2 வரவு 14 செலவு
- இடபம் – 11 வரவு 5 செலவு
- மிதுனம் – 14 வரவு 2 செலவு
- கடகம் – 14 வரவு 8 செலவு
- சிம்மம் – 11 வரவு 11 செலவு
- கன்னி – 14 வரவு 2 செலவு
- துலாம் – 11 வரவு 5 செலவு
- விருச்சிகம் – 2 வரவு 14 செலவு
- தனுசு – 5 வரவு 5 செலவு
- மகரம் – 8 வரவு 14 செலவு
- கும்பம் – 8 வரவு 14 செலவு
- மீனம் – 5 வரவு 5 செலவு
தோஷ நட்சத்திரங்கள்
- திருவாதிரை
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- சதயம்
- பூரட்டாதி
- உத்தரட்டாதி
- ரேவதி
ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும். மேலும் இந்த நடசத்திரங்களில் பிறந்தவர்கள் , தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
சிங்களவரின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழரின் பண்பாட்டில் இருந்தே தோன்றியது என்றாலும், சிற்சில வேறுபாடுகளும் உண்டு
1. புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றால் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்தல் தமிழர்களின் பழக்கங்களில் ஒன்றாகும். சிங்களவர்களும் அப்படியே. தற்காலத்தில் சுண்ணாம்பு அடித்தல், வெள்ளைப் பூசுதல், வர்ணம் பூசுதல் என மாற்றம் பெற்றுள்ளது.
2. புத்தாண்டுக்கு முதல் நாட்களில் வீட்டை சுத்தம் செய்தல், (வீட்டின் மண் தரை) சாணம் இட்டு மெழுகுதல், (வீட்டின் சிமெந்து தரை) கழுவுதல் போன்றவைகளும் தமிழர் போன்றே சிங்களவர்களும் செய்கின்றனர்.
3. புத்தாண்டு பிறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, புத்தாண்டு நிகழ்வுகளை பஞ்சாங்க நேரக் கணிப்பீட்டின் படியே தமிழர்கள் செய்வது வழக்கம். சிங்களவர்களும் அப்படியே செய்கின்றார்கள். பஞ்சாங்கம் எனும் சொல், சிங்களவர்களால் “பஞ்சாங்க” என்று “ம்” எழுத்தின் ஒலிப்பின்றி பயன்படுத்துகின்றனர். இச்சொல் தமிழரின் வழக்கில் இருந்து சிங்களத்திற்குச் சென்றதாகக் கொள்ளலாம்.
4. தமிழர்களின் புத்தாண்டில் முதன்மையானவற்றுள் ஒன்றாக இருப்பது, பணியாரமும் வாழைப்பழமும் ஆகும். சிங்களவர்களிடமும் அவைகளே முக்கிய அங்கம் வகிக்கின்றது. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே வாழைக் குழைகள் பழுக்க வைக்கப்பதும் அப்படியே.
5. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் செய்து புத்தாண்டு நாள் பாவனைக்காக மண் முட்டிகளில் பத்திரப்படுத்தும் வழக்கம் பழந்தமிழர் தொட்டு இருக்கின்றது. இதுவும் சிங்களவர்களிடம் உண்டு.
6. இந்த புத்தாண்டிற்கான பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட நேரத்திலேயே தயாரிக்க தொடங்கவேண்டும் எனும் ஒரு வழக்கு சிங்களவரிடையே உள்ளது. அதற்கு “எண்ணெய்ப் பாத்திரம் அடுப்பில் வைக்கும் நேரம்” (Thel Valan Lipa Thebeema Nekatha) எனக் கூறப்படுகின்றது. அந்நேரத்திலேயே புத்தாண்டிற்கான தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு தீ மூட்டி எண்ணெய்ப் பாத்திரங்கள் அடுப்பில் வைக்கப்படுகின்றது.
தயாரிக்கப்படும் தின்பண்டங்கள்
- பணியாரம் – கெவுங்
- கொண்டை பணியாரம் – கொண்டே கெவுங்
- பாசிப்பயறு பணியாரம் – முங் கெவுங்
- கொக்கிசு – கொக்கிஸ்
- அலுவா – அலுவா
- வெளித்தலப்பா – வெளித்தலப்பா
- பானிவலயல் – பெனிவலலு
புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்கள்
புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளயாட்டுக்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. சில இடங்களில் புத்தாண்டு அன்றே நடைபெறும். அநேக இடங்களில் தத்தமது வசதிக்கேற்ற நாட்களில் வைத்துக்கொள்வர். இப்புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்களில் சில:
- வழுக்கு மரம் ஏறுதல்
- கண்கட்டி முட்டி உடைத்தல்
- கயிறு இழுத்தல்
- யாணைக்கு கண் வைத்தல்
- பப்பா பழத்தினுள் இருக்கும் கொட்டைகளை என்னுதல்
- தலையனை சண்டையிடல்
- ஊர் சுற்றி ஓட்டப் பந்தயம்
- மறைந்திருக்கும் நபர் தேடுதல்
- மிதி வண்டி ஓட்டப்போட்டி
- ரபான் அடித்தல் போட்டி
- அழகுராணி தேர்வு (சிங்கள கலாச்சார உடையில்)
- பெண் குழந்தைகளின் அழகுராணிப் போட்டி
இவ்வாறு சிங்களப் புத்தாண்டு தமிழரின் கொண்டாட்டங்களில் இருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இவை தமிழரின் பண்பாட்டு பழக்கவழக்கங்களில் இருந்தே தோன்றியவை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் காலமாக தமிழ் புத்தாண்டையே சிங்களவர்களும் கொண்டாடி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் அவர்கள் தமிழ் புத்தாண்டை “தமிழ் சிங்களப் புத்தாண்டு” என கொண்டாடி வருகின்றனர். இது வரலாற்று ரீதியாக தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் இலங்கை தீவெங்கும் வியாபித்து இருந்ததற்கான ஒரு சான்றாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்