வாழைச்சேனையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரரால் குழப்பநிலை!

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை துறைமுகப்பகுதியில் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெறுவதாக பிரதேச மீனவ அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

துறைமுகப் பகுதியின் அருகாமையில் உள்ள ஆற்றோர அரச காணியினை மீனவர்கள் தங்களது நாளாந்த போக்குவரத்து மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கா பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் குறித்த காணியை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் சட்டவிரோதமான முறையில் அடைந்து வைத்துள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விடயங்களை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக மீனவ அமைப்பு பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை அப்பகுதி மீனவர்களுடன் இரா சாணக்கியன் உரையாடிக்கொண்டிருந்த வேளை குறித்த காணியை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்த நபரும் அவரது ஆட்களும் அவ்விடத்திற்கு வந்ததால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்