Last updated on January 23rd, 2025 at 09:59 pm

வானில் தென்படவுள்ள அரிய நிகழ்வு

வானில் தென்படவுள்ள அரிய நிகழ்வு

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வை எதிர்வரும் 21 ஆம் திகதி அவதானிக்க முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய ஆறு கோள்களே இதன்போது தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த அரிய வானியல் நிகழ்வை ,தொடர்ந்து 4 வாரங்களுக்கு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவதானிக்கமுடியும் என குறிப்பிடப்படுகிறது.

மேலும், யுரேனஸ், நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களை தொலை நோக்கியின்றி வெறும் கண்களில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படுவது ஆண்டுதோறும் இடம்பெறும் நிகழ்வு என்றபோதிலும் ஆறு அல்லது ஏழு கிரகங்கள் ஒரு சீரமைப்பை உருவாக்குவது அரிதானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM