வாக்களிக்கும் வாய்ப்பை பல்கலைக்கழக மாணவர்கள் இழப்பார்களா?
ஜனாதிபதித் தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி பகல் முழுவதும் ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக தொலைவில் வசிக்கும் யாழ்ப்பாணம், ருஹூணு, களனி ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெப்ரல் அமைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்குவது தொடர்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்