வாகன விபத்து: யுவதி பலி – மூவர்காயம்
மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை ரஜமகா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மூவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரிதிமாலியத்த 12, ஊரணிய பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ஹிமான்ஷி செவ்வந்தி (வயது-24) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை ரஜமகா விகாரைக்கு அருகில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் மஹியங்கனை நகருக்குச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 15 வயதுடைய சிறுமி பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்