
வாகன விபத்து : மாணவி உட்பட அறுவர் படுகாயம்
கொழும்பு கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் பேருந்தும் சொகுசு வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பாடசாலை மாணவி உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தேகொடை பகுதியிலிருந்து சென்ற வேன் ஒன்று கொழும்பு நோக்கி திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் கஹதுடுவ பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
விபத்தில் வேனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும்இ பாடசாலை மாணவி ஒருவரும், பேருந்தில் பயணித்த மூன்று பெண்களும் காயமடைந்து வெத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த வேனின் சாரதியும், வேனில் பயணித்த மேலும் ஒரு நபரும் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.