வாகன விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

இந்தியாவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததாகவும், தீயணைப்புப் படையினர் வந்து அணைப்பதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து சேதமுற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்