
வாகன விபத்து: ஒருவர் படுகாயம்
கொழும்பு – அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறி சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்