வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒசூர் -ராயக்கோட்டை சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒசூர் நகர பொலிஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கர்ப்பிணியை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கண்டறிந்த பொலிஸார், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்