வாகன திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது
கொழும்பின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மென்பொருள் பொறியியலாளர் வத்தளை பகுதியில் வைத்து மேல் மாகாணத்தின் தென் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்