வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அவை இறக்குமதி செய்யப்படும் திகதிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்