Sri Lanka Tamil News Site

வாகனேரியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

- Advertisement -

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் மோட்டார்; குண்டுகள் அடங்கிய வெடிப்பொருட்கள் சிலவற்றினை இன்று புதன்கிழமை மீட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை காகிதஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது , இதன்போது ரி-81 ரக மோட்டார் குண்டுகள் 20 மீட்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இரண்டு இரும்பு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசமானது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசமாகும்.

- Advertisement -