வவுனியா பன்டாரவன்னியன் சதுக்கத்தின் இன்றைய நிலை?

-வவுனியா நிருபர்-

வவுனியா நகரின் மத்தியில் மாவட்ட செயலகத்தின் முற்பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பன்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள பன்டாவன்னியன் சதுக்கத்தின் இன்றைய நிலை கேள்விக்குறியாக உள்ளது.

பராமரிப்பு இன்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது , வவுனியாவில் கடந்த காலங்களில் ஓரிரு அமைப்புக்கள் இருந்தன பன்டாரவன்னியன் எனும் பெயரில், அந்த அமைப்புக்களின் இன்றைய நிலையும் சிலையின் இன்றைய நிலையை போலவே கேள்விக்குறியாக உள்ளது.

மாவட்ட செயலகத்தினராவது இதனை மனதில் கொண்டு குறித்த பகுதியை துப்பரவு செய்து பராமரிப்பு செய்வார்களா..?

வன்னியின் அடையாளமான மாவீரன் பன்டாரவன்னியனின் சிலைக்கு இந்த நிலையா?
ஞாபகார்த்த தினங்களில் மாத்திரம் துப்பரவு செய்து கண்துடைப்புக்காக செயல்படாமல் தொடர்ந்து இந்த பகுதியை பராமரிப்பதற்கு உரிய அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் , சிவில் அமைப்புக்கள் முன்வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்