வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு மீட்பு

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மோட்டர் குண்டு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த போது குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான வெடிபொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, வவுனியா பொலிசாருக்கு அறிவித்தையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுட்ன், அது மோட்டர் குண்டு என உறுதிப்படுத்தினர். விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அதனை அகற்றுவதந்கான நடவடிக்கையை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.