வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை

மலையக ரயில் பாதையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவையை இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை ரயில் பாதையில் விழுந்த மரத்தின் அளவு அதிகமாக இருந்ததால் அதனை வெட்டுவதற்கு நீண்ட நேரம் எடுத்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இயங்கும் ரயில் தடைபட்டுள்ளதாகவும், ரயிலில் வரும் பயணிகளுக்கு நாவலப்பிட்டி மற்றும் ஹட்டனில் இருந்து பஸ்கள் மூலம் பயண வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்