வழமைக்கு திரும்பியது பண்டாரவளை-பசறை வீதி
-பதுளை நிருபர்-
சீரற்ற காலநிலையின் காரணமாக, நேற்று வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் நமுனுகுலை 16 வது மைல் கல்லுக்கு அருகில், பாரிய சைப்பிரஸ் மரங்களும், கற்களும் வீதியில் விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும், பதுளை எலதலுவ பகுதியில் முகாமிட்டுள்ள இராணுவத்தினரும், ஊர் மக்களும் இணைந்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில், கற்களையும், மரங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழியமைத்தனர்.
இருப்பினும், சாரதிகள் மிகவும் அவதானத்துடன் அவ்விடத்தில் வாகனங்களை செலுத்துமாறு, கேட்டுக் கொள்ளப்படுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்