வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி

-யாழ் நிருபர்-

நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, எரிபொருள் பிரச்சினை போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கண்டித்து வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

சுழிபுரம் சந்திப்பகுதியில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டம், சங்கானை பிரதேச செயலகம் வரை சென்று, பிரதேச செயலகத்திற்கு முன்னால் முற்றுகை போராட்டமாக மாற்றமடைந்தது.

இப் போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் து.சுஜிந்தன், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவன் மற்றும் வலி. மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டனர்.