வறண்ட காலநிலையால் பரவும் எலிக்காய்ச்சல்: இருவர் பலி

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தை சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்திருந்தனர்.

38 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கிரிந்திவெல்மட குளத்தில் நீராடும்போது சுகவீனமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மகுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த மேலும் 12 பேர் காய்ச்சலினால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குறைந்த நீருள்ள ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் வருவதால், எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்