வருடத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை!
இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 70,944 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.
அத்துடன் இந்தியாவிலிருந்து 11,789 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு நாட்டிற்கு வருகைதந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,053,465 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்