வரிசை யுகம் இன்னும் நீங்கவில்லை: நாமல்

வரிசை யுகத்தை நீக்கிவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினாலும், தற்போதும் கடவுச்சீட்டுக்கான வரிசை நீடிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று புதன் கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரி அதிகரிப்பு மற்றும் அரச சொத்துக்களை விற்பனை செய்வதாலேயே அரச வருமானம் அதிகரிப்பதாக அரசாங்கம் கருதுமானால் அது தவறான விடயமாகும். நட்டம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதால் ஒருபோதும் தீர்வு காண முடியாது.

வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக ஜனாதிபதி கூறுகிறார். இன்னும் கடவுச்சீட்டுக்காக வரிசை நீடிக்கின்றது. அதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குகின்ற போது, வெளிநாட்டவர்கள் விசாவுக்காக வரிசையில் நிற்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.