வரிசையில் காத்திருந்த நபருக்கு நடந்தது என்ன?

காலி, தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது பட்டா வகை வாகனத்தில் வரிசையில் இருந்துள்ளதோடு, பின்னர் இரவு வேளை வீட்டுக்கு வந்து மீண்டும் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வாகனத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுவத்தை, ஹபரகட, தவலம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பபகொட பத்திரண பிரசன்ன திலக் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது பட்டா வகை லொறியுடன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வரிசையில் நின்றிருந்துள்ளார்.

இந்நிலையில், பின்னர், காலை 6.30 மணியளவில் அவரை தெரிந்த சிலர் லொறியை பார்வையிட்ட போது அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.